ஆபத்தை உணராமல் தடுப்பணையில் இறங்கி குளிக்கும் மக்கள்..!
குழித்துறை தடுப்பணை பகுதியில் மக்கள் ஆபத்தை உணராமல் இறங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. குமரியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பேச்சுப் பாறை அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
குளித்துறை தடுப்பணையில் அரசு எச்சரிக்கையை மீறி உயிருக்கு ஆபத்தான நிலையில் பொதுமக்கள் குளித்து வருகின்றனர். இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது தடுப்பணை பகுதியில் இறங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





