--- --:--:-- --

வெறிநாய் கடித்ததில் வட மாநிலத்தவர் உட்பட 8க்கும் மேற்பட்டோர் காயம்..!

7

ராமேஸ்வரத்தில் வெறிநாய் கடித்ததில் வட மாநிலத்தவர் உட்பட எட்டுக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் ராமநாதசுவாமி திரையரங்கம் பகுதியில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று அந்த வழியாக சென்றவர்களை கடித்ததாக கூறப்படுகிறது.

 

இதில் வடமாநில பெண் பக்தர் உட்பட எட்டுக்கும் ஏற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon