நடைப்பயிற்சி சென்ற பெண்..ஸ்கெட்ச் போட்ட மர்ம நபர்..!
நடைப்பயிற்சி சென்ற பெண்ணை ஒருவர் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அதிகாலையில் ஐந்து மணியளவில் நடந்து சென்ற பெண்ணை பின் தொடர்ந்து வந்த நபர் ஒருவர் திடீரென அந்த பெண்ணை பின்னால் இருந்து கைகளால் கட்டி இழுத்து பாலியல் துன்புறுத்தலில் காட்சிகள் பதிவாகியுள்ளன.
மேலும் அந்த பெண் கத்தி கூச்சலிட்டதோடு மர்மநபர் பிடியிலிருந்து விலக முயற்சித்தது. தொடர்ந்து அந்த நபர் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிய காட்சிகளும் சிசிடிவியில் தெளிவாக பதிவாகி இருந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில்மர்ம நபரை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





