200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்..!
கொடைக்கானல் மலைச்சாலை கொண்ட ஊசி வளைவில் திரும்ப முயன்ற பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் செந்தில் என்பவர் உயிரிழந்த நிலையில் நால்வர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
நேற்று இரவு கார் பள்ளத்தில் விழுந்ததாக கூறப்படும் நிலையில் இது குறித்து இன்று காலை தகவல்கள் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.





