துப்பாக்கி சூடு நடத்திய 5 வயது சிறுவன்..பள்ளியில் நடந்த பயங்கரம்..!
பள்ளியில் 5 வயது சிறுவன் 10 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஹார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை அன்று பள்ளிக்கு சென்ற ஐந்து வயது நர்சரி மாணவன் தனது பேக்கில் துப்பாக்கியை எடுத்து வந்துள்ளான்.
மேலும் அதே பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனை சிறுவன் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கியின் குண்டு மாணவன் கையில் பாய்ந்ததில் மாணவன் படுகாயம் அடைந்துள்ளான். பின்னர் காயமடைந்த மாணவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் சிறுவனின் கைக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பதை பற்றி விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளார் .மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பைகளை சோதனை செய்யவும் காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.






