பிரிந்து சென்ற மனைவி..மாமனாரை கொலை செய்த மருமகன்..!
மதுரை மாவட்டத்தில் மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் மாமனாரை கீழே தள்ளி தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக மருமகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
லட்சுமணனின் மகள் மீனா. தனது கணவர் கார்த்திக்குடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்ட பொழுது கார்த்திக் – லக்ஷ்மணன் இடையே ஏற்பட்ட வாய் தகராறு கொலையில் முடிந்ததாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





