தேரோட்டக் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் ஒருவர் உயிரிழப்பு..!
ஒடிசாவில் உள்ள பிரசித்தி பெற்ற புரி ஜெகநாதர் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். புரி ஜெகநாதர் ஆண்டுதோறும் நடைபெறும் தேரோட்டம் உலகப் பிரசித்தி பெற்றது.
வழக்கம் போல இந்த ஆண்டு முதல் தேரில் புரி ஜெகநாதரும் அதற்கு அடுத்தபடியாக அவரது சகோதரர் வனராமர், சகோதரி சுபத்திரை வரிசையாக எழுந்தருள பக்தர்கள் பக்தி முழக்கம் எழுப்பினர். சொந்த ஊர் என்பதால் நிகழ்வில் பங்கிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மூன்று தேர்தலில் வலம் வந்து வழிபாடு நடத்தினார்.
தொடர்ந்து குடியரசு தலைவர், ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான ஆகியோர் வடம் பிடித்து தேரை இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதில் ஏராளமான மக்கள் பங்கேற்ற நிலையில் தேரோட்டத்தின் பொழுது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





