--- --:--:-- --

மும்பையில் பயங்கர அதிவேகமாக சென்ற பிஎம்டபிள்யூ கார் மோதி பெண் பலி..!

8

மும்பையில் இருசக்கர வாகனம் மீது bmw கார் மோதியதில் காரில் பேனட்டில் 100 மீட்டர் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ஆரணியில் இருசக்கர வாகனம் மீது வேகமாக வந்த BMW கார் மோதியது. காரின் பேனட்டில் சிக்கி காவிரி என்ற பெண் 100 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டதில் உயிரிழந்தார்.

 

இந்த விபத்தில் பெண்ணின் கணவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கு பதிவு செய்த காவலர்கள் காரை பறிமுதல் செய்து கார் ஓட்டுநர் உட்பட இரண்டு பேரை கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon