இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வெளியுறவு துறை அமைச்சகம்..!
ஈரான் இஸ்ரேலுக்கு இந்தியர்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என வெளியுறவு துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மறு அறிவிப்பு வரும் வரை ஈரான், இஸ்ரேலுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்.
பயணத்திட்டம் இருந்தால் அதனை ரத்து செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அதுபோல ஈரான் இஸ்ரேலில் தங்கியுள்ள இந்தியர்கள் உடனே அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகத்தை அணுகுமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஈரான், இஸ்ரேலில் தங்கியுள்ள இந்தியர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளவும் வெளியிறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் நாடு தாக்குதல் நடத்தக்கூடும் என்று அச்சம் இருந்துள்ள சூழலில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே போல இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்காவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





