மறைந்த டேனியல் பாலாஜியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது!
பிரபல நடிகர் டானியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 48. காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வடசென்னை, பிகில் உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் டேனியல் பாலாஜி.
இவர் திருவான்மையூரில் தனியாக வசித்து வந்து நிலையில் நெஞ்சுவலி ஏற்படவே கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
மறைவு செய்தியை அறிந்து இயக்குனர்கள் வெற்றிமாறன், கௌதம் மேனன் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்றனர். டேனியல் பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரின் உடல் அவர் பிறந்து வளர்ந்த சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது.
அங்கு அவருக்கு திரை துறையினர் ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதற்கிடையே மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





