--- --:--:-- --

செயல்படாத பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்..?

5

சென்னையில் செயல்படாத பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்று காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. சென்னை மேற்கு மாவட்ட வாசுதேவபுரம் பகுதியை பால வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது.

 

இந்த பள்ளி வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். சற்று நேரத்தில் பள்ளியில் வெடி குண்டு வெடிக்க இருப்பதாக கூறி அவர் இணைப்பை துண்டித்துள்ளார்.

 

வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு பிரிவு மற்றும் மோப்ப நாய் பிரிவு காவல் துறையினர் பள்ளிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது.

 

இந்த சம்பவம் குறித்து அசோக் நகர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பால வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆனது கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது மூடப்பட்டது.

 

அதன் பிறகு திறக்கப்படாத நிலையில் மாணவர்கள் யாரும் அங்கு பயிலவில்லை என்பது தெரிய வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்படாத பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon