--- --:--:-- --

குஷ்புவா? ஆளை விடுங்க சாமி! ஓரங்கட்டிய பாஜக!

3

பாஜகவில் நேற்று வந்து ஐக்கியமான சரத்குமாருக்கு கட்சியில் ராஜமரியாதை. அவரது மனைவியான நடிகை ராதிகாவுக்கு சீட்டும் கொடுத்துவிட்டார்கள். ஆனால், இத்தனை காலமாக ஓடாய் உழைத்து துரும்பாய் இளைத்த தனக்கு வாய்ப்பினை பாஜக தரவில்லையே என்று நடிகை குஷ்பு புலம்புகிறார்.

 

ஒருகாலத்தில் பாஜகவில் ஆஹா ஓஹோ என்றிருந்த குஷ்புவை ஏன் கட்சித் தலைமை கண்டுகொள்ளவில்லை. இதற்கு குஷ்புவின் வாய்ப்புகொழுப்புதான் காரணம் என்கிறார்கள் சீனியர் ஜீ ஒருவர். அண்மையில் மகளிர் உரிமைத் தொகையை பிச்சைக் காசு என்று சொல்லி சர்ச்சையை குஷ்பு கிளப்பினார். இதை பாஜக மேலிடம் ரசிக்கவில்லையாம். அவருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடக்க, பாஜகவுக்கு சங்கடமாகிவிட்டது.

 

அதுமட்டுமில்லையாம்… அண்மையில் ஓபிஎஸ்-ஐ மேடையில் வைத்து பேசிய குஷ்பு, இபிஎஸ் என்று உளறிக் கொட்டியுள்ளார். இதை பார்த்து, ஓபிஎஸ் மட்டுமில்லாமல் பாஜக தலைவர்களே அதிர்ந்துவிட்டனர். பின்னர் தவற்றை உணர்ந்த குஷ்பு, ஓபிஎஸ் என்று திருத்தி பெயரை உச்சரித்துள்ளார். மேடையில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் குஷ்புவை கண்டாலே, ஆளை விடுங்கசாமி என்று ஓட்டம் பிடிக்கிறார்களாம் பாஜகவினர்.

 

கூட்டணி கட்சித் தலைவரின் பெயரையே ஒழுங்கா சொல்லத் தெரியலை… இவரை பிரசாரத்திற்கு அனுப்பக்கூட தயக்கமாக இருக்கு… இந்த லட்சணத்தில் தேர்தலில் நிற்க சீட் தரவில்லையென்று குஷ்பு கூப்பாடு போடணுமா என்று தாமரை பிரதர்ஸ் பொருமுகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon