--- --:--:-- --

பேருந்து படிக்கட்டில் பயணம்..பறிபோன 4 உயிர்கள்..!

9

மதுராந்தகம் அருகே பேருந்து படிக்கட்டில் பயணம் செய்து உயிரிழந்த மாணவர்களின் கல்லூரியில் சாலை விதிமுறைகள் குறித்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி உரசியதால் பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த நான்கு மாணவர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். இந்த நிலையில் உயிரிழந்த மாணவர்கள் படித்த தனியார் கல்லூரி மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை குறித்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் எடுத்துரைத்தார்.

 

பேருந்துகளின் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் பொழுது ஏற்படும் ஆபத்துகள் குறித்தும், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்களுக்கு காவல் ஆய்வாளர் மணிமாறன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon