நண்பர்களோடு சுற்றுலா சென்ற இளைஞர் 300 அடியில் விழுந்து பலி..!
நீலகிரி மாவட்டம் செங்குட்டுவன் ராயன் மலையில் மஞ்சமல் பாய்ஸ் பட பாணியில் சுற்றுலா சென்ற பத்து இளைஞர்களில் ஒருவர் திடீரென மாயமானதும் பின்னர் 300 அடி ஆழ பள்ளத்தில் இருந்து இளைஞர் சடலமாக மீட்கப்பட்டதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை செங்குட்டுவராயன் மலையில் கடந்த 15 ஆம் தேதி 10 இளைஞர்கள் சுற்றுலா சென்றிருந்தனர். மஞ்சுமோல் பாய்ஸ் பட பாடகி 10 இளைஞர்களும் தடை செய்யப்பட்ட மலையேற்றத்திற்குள் நுழைந்து செக்கின்செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது மலைகள் இருந்த தேனீக்கள் கூட்டு கலைந்ததாகவும் இதனால் இளைஞர்கள் சிதறி ஓடியதாகவும் கூறப்படும் நிலையில் சில மணி நேரத்திற்கு பிறகு இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.
அப்பொழுது ஒரு இளைஞர் மட்டும் தங்களுக்குள் காணாததை அறிந்து இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோபால்பட்டியை சேர்ந்த பிரவீன் குமார் என்று அந்த இளைஞரை அவரது நண்பர்கள் மழை முழுவதும் கத்தி கூச்சலிட்டு தேடி வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ட்ரோன் மூலம் இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் மலையில் இருந்த பள்ளம் ஒன்றில் 300 அடிக்கும் கீழ் இளைஞர் சடலமாக கடந்ததைக் கண்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இளைஞரை மீட்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





