ஸ்வீட்சில் நெளிந்த புழு.. சாப்பிட கொடுத்த உரிமையாளர்..!
நாகையில் பிரபல இனிப்பு கடையில் வெறுக்கப்பட்ட இனிப்பில் புழு இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். நாகை பழைய பேருந்து நிலையம் கடையில் அமைந்துள்ள பிரபல இனிப்பு கடையில் வாடிக்கையாளர் ஒருவர் இனிப்பு வகையை வாங்கியுள்ளார்.
அதன் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த கடைக்காரரிடம் முறையிட்டுள்ளார். மேலும் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த அனைத்து ஸ்வீட்சிலும் புழு இருந்ததை கண்டு கெட்டுப் போனதை எப்படி வியாபாரம் செய்கிறீர்கள் என ஆதங்கமாக கேள்வி எழுப்பினார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் இனிப்பு கடையில் ஆய்வு நடத்தி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் நடவடிக்கை எடுத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





