பயணிகளை தள்ளி இறக்கி விட்ட ஓட்டுனருக்கு ரூபாய் 78 ஆயிரம் அபராதம்..!
இரண்டு கிலோமீட்டர் தள்ளி இறக்கிவிட்டு பயணிகளுக்கு மன உளைச்சல் ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனருக்கு நுகர்வோர் நீதிமன்றம் 78 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதித்துள்ளது.
நெல்லை மாவட்டம் மஞ்சங்குளம் கிராமத்தில் 25 பேர் வள்ளியூருக்கு சென்ற அரசு பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். 11ருபாய் கட்டணமாக வாங்கிய பேருந்து நடத்தினர் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊரில் பேருந்தை நிறுத்தியுள்ளார்.
இதனால் நடத்துனருக்கும் பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கீழே இறங்கிய பயணிகள் இரவு நேரத்தில் 2 கிலோ மீட்டர் நடந்து சென்று ஊரை அடைந்தனர்.
இதுநாள் மன உளைச்சலுக்கு ஆளான மக்களை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் 78 ஆயிரம் ரூபாய் பணத்தை அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





