சென்னையில் பெற்றோரை பரபரப்பாகிய ஒற்றை ஆடியோ..!
சென்னை உள்ள கரம் பகுதியில் பள்ளி மாணவிகள் கடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோவால் பெற்றோர் அச்சப்பட தேவையில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகளை குறிவைத்து மர்ம நபர் ஒருவர் பின் தொடர்ந்து வந்து கடத்தி செல்வதாக சமூக வலைதளத்தில் ஆடியோ பரவி வருகிறது. இதில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மடிப்பாக்கம் போலீசார் தங்களுக்கு இந்த ஆடியோ பதிவில் கூறப்பட்டுள்ள நபர் பற்றி எந்த புகார் வரவில்லை என்றும் ஆடியோவில் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





