போலீசாரையே மிரள வைத்த நடிகரின் மனைவி..!
மோசடியில் ஈடுபட்டதாக சினிமா துணை நடிகரின் மனைவியை போலீசார் கைது செய்தனர். திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை விசுவாஸ் நகர் அருகே கந்து வட்டிக்கு வாங்கிய கடனை திரும்பத் தராத மனைவி மாலதி என்பவரை ஒருவர் கடத்தி வைத்து கொடுமைப்படுத்துவதாக போலீசாருக்கு புகார் வந்தது.
அதன் பேரில் துணை நடிகரின் மனைவி ஆன மாலதி காந்தி மார்க்கெட் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மாலதி பல பேரிடம் பல கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் ஆன்லைன் வர்த்தகத்தில் கூடுதல் கிடைக்கும் என்று கூறி திருச்சி ஆடிட்டர் சித்தா என்பவரிடம் ஒரு கோடியை 88 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசாரால் மாலதி கைது செய்யப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





