மின்கம்பத்தில் ஏறிய ஊழியர் திடீரென மயங்கி அந்தரத்தில் தொங்கியதால் பரபரப்பு..!
கர்நாடகாவில் மின் கம்பத்தில் ஏறி மின் இணைப்பை ஊழியர் ஒருவர் சரி செய்த பொழுது திடீரென மயங்கி அந்தரத்தில் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இம்ரான் என்ற மின் ஊழியர் மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பை சரி செய்து கொண்டிருந்தார்.
அப்பொழுது திடீரென அவர் மயங்கி அந்தரத்தில் தொடங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக சென்ற பொது மக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இம்ரானை மீட்ட பொதுமக்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைக்கு பின் அவர் சுய நினைவுக்கு திரும்பியுள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





