பசியால் இறந்து கிடந்த பூனையை சாப்பிட்ட இளைஞர்..!
கேரளாவில் பசியால் வாடிய இளைஞர் ஒருவர் பூனை இறைச்சியை சாப்பிட்ட சம்பவம் காண்போரை அதிர்ச்சிக்கு உள்ளாகியது. மலப்புரம் மாவட்டத்தில் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நடமாடி வந்த இளைஞர் ஒருவர் சாலையோரம் இறந்து கிடந்த பூனையை எடுத்து சாப்பிட துவங்கினார்.
அவருடைய செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த இளைஞரை பிடித்து விசாரித்த பொழுது அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது.
கடந்த டிசம்பரில் குடும்பத்தினருக்கு தெரியாமல் கேரளாவிற்கு ரயிலில் வந்தவர் ஐந்து நாட்களாக பசியால் இருந்ததால் பூனை இறைச்சியை சாப்பிட்டதாக கூறினார். அந்த இளைஞர் சென்னையில் உள்ள சகோதரனின் செல்போன் எண்ணை கொடுத்ததால் அவரை தொடர்பு கொண்டு போலீசார் தகவலை உறுதிப்படுத்தினர்.
அவருக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் எந்த பிரச்சனையும் இல்லை என்பதால் உறவினர்களிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





