காஞ்சிபுரத்தில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளம்..!
ஸ்ரீபெரும்புதூரில் சாலையில் திடீரென 3 அடி ஆழத்திற்கு ராட்சத பள்ளம் இருந்ததாக வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் செல்லும் சாலையில் திடீரென மூன்று அடையாளத்திற்கு ராட்சத பள்ளம் ஏற்பட்டது.
இதனால் அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போக்குவரத்து காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ராட்சத பள்ளத்தை சுற்றி இரும்பு தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை மாற்றம் செய்தனர்.
இதையடுத்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் பேரூராட்சி அதிகாரிகளும் சாலையில் ஏற்பட்ட ராட்சத பலத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





