--- --:--:-- --

வாடகையை கேட்டு ஓனரை கத்திரிக்கோலால் தாக்கிய டெய்லர்..!

9

வாடகை பணம் கேட்டு வந்த கடை உரிமையாளரை கையில் தையல் கடைக்காரர் கத்திரிக்கோலால் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் வேலூரில் பரபரப்பு கிளப்பியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டையை சேர்ந்தவர் மகேஷ்.

 

அதே பகுதியில் டெய்லர் கடை வைத்து நடத்தி வரும் இவர் கடந்த மூன்று மாதங்களாக கடைக்காரர் வாடகை பணத்தை தராமல் இழுத்து அடித்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இதனால் சம்பவத்தன்று வாடகை பணம் கேட்டு வந்த கடை உரிமையாளர் அரசு என்பவரை மகேஷ் கத்திரிக்கோலால் கண்மூடித்தனமாக குத்தி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்து கிடந்தவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் டெய்லர் மகேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon