திருச்சி விமான நிலையத்தில் தங்க நாணயம் பறிமுதல்..!
திருச்சி விமான நிலையத்தில் 26 லட்சம் ரூபாய் மதிப்பிற்கான தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த விமான பயணிகளிடம் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது மூன்று பயணிகள் தங்களது உடைமைகளில் 30 தங்க காயின்கள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. சுமார் 76 லட்ச ரூபாய் மதிப்புரான தங்க நாணயங்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் மூன்று பயணிகளிடமும் விசாரணை நடத்தினார்.





