ரயில்வே சுரங்க பாதையில் சிக்கிய பள்ளி வேன்..!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுரங்க பாதையில் சிக்கிய பள்ளி வேனால் பரபரப்பு ஏற்பட்டது. ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேங்கியிருந்த நிலையில் அந்த வழியாக சென்ற பள்ளி வேன் நீரில் சிக்கி பழுதானது.
இதனால் மாணவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தனர் தகவலறிந்து வந்த விவசாயி ஒருவர் தனது டிராக்டர் மூலம் கயிறு கட்டி இழுத்துச் சென்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





