நெல்லையில் நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்க கோரி பொதுமக்கள் போராட்டம்..!
நெல்லை மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம் அறிவித்திருந்த நிலையில் ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுக்கப்படுவதாக கூறிய பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 6,000 ரூபாயும் 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் தாலுகாவில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் 1000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த கிராம மக்கள் 6000 ரூபாய் வழங்க கோரி நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாதேவன் குலம் திட்ட மொழி, ,அழகப்பபுரம், மன்னார்குரம், ஆரியக்குடி உள்ளிட்ட கிராமங்களில் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டும் சாலை மறியலில் ஈடுபடும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





