பள்ளிக்கு செல்ல மாணவர்கள் பயன்படுத்திய பாதையை மூடிய போலீசார்..!
ஓசூர் அருகே பள்ளிக்கு செல்லும் பாதையை சிமெண்ட் சுவர் அமைத்து மூடியதால் மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பள்ளியில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
பள்ளிக்கான பேருந்து நிலையத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளதால் மாணவிகள் பள்ளியில் பின்பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று பாதையை பயன்படுத்தி வந்தனர்.
மாணவிகளின் பாதுகாப்பு கருதி போலீசார் அந்த வாயிலை சிமெண்ட் கருவறை கொண்டு அடைத்ததால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் பெற்றோர்கள் காவல் நிலையம் அந்த பாதையை ஏற்படுத்தி தருமாறு வலியுறுத்தினார்.
பேச்சுவார்த்தையில் கல்வித்துறை அதிகாரியிடம் ஆலோசனை நடத்தி பாதை ஏற்படுத்தி தருவதாக போலீசார் கூற அனைவரும் கலைந்து சென்றுள்ளனர்.






