மாயமான மலேசியா விமானம்..மீனவர் தகவலால் பரபரப்பு..!
மாயமான மலேசியா விமானத்தில் பெரிய பாகம் கிடைத்துள்ளதாக ஆஸ்திரேலியாவில் ஒருவர் தெரிவித்துள்ளார். மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் பயணிகள் விமானம் கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8ம் தேதி கோலாலம்பூரில் இருந்து சீனா நோக்கி சென்ற பொழுது காணாமல் போனது.
அதில் 227 பயணிகள் 12 விமான ஊழியர்கள் என 239 பேர் இருந்தனர். விமானம் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விழுந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக சுமார் 20,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேடி விமானம் எந்த இடத்தில் விழுந்தது என்பதை கண்டறிய முடியவில்லை. இந்த நிலையில் அந்த விமானம் காணாமல் போன ஆறு மாதங்களுக்கு பிறகு விமானத்தின் பெரிய பாகத்தை கண்டுபிடித்ததாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த மீனவர் கூறியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானம் காணாமல் போய் 9 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் அவர் இந்த தகவலை கூறுகிறார். ஆனால் இதுவரை ஆசிரியர் அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





