--- --:--:-- --

இன்று 2,000 இடங்களில் நடைபெறும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்..!

1

மிழ்நாடு முழுவதும் 2.000 இடங்களில் இன்று மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இன்று தமிழ்நாடு முழுவதும் 2,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றும் அதில் சென்னை மாநகராட்சிக்கு 100 இடங்களில் முகாம்கள் நடைபெறும் எனும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு முகாம் தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் இன்று நடைபெறும் எனவும் மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது. முகாம்களில் பங்கேற்கும் பொதுமக்கள் காப்பீடு அட்டைகளை பெற்று பயன்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Right Menu Icon