--- --:--:-- --

பள்ளிக்குள் புகுந்த மழை நீர்.. தண்ணீரில் மாட்டிக் கொண்ட தம்பதி..!

5

சென்னை, கோடம்பாக்கம், ரங்கராஜபுரத்தில் சாலை முழுவதும் தேங்கி இருந்த மழை நீரால் மாணவர்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு உள்ளாக்கி உள்ளனர்.

 

சென்னையில் கடந்த 3 நாட்களாகவே விட்டுவிட்டு பெய்து வரும் கனமழை காரணமாக டி நகர், மேற்கு மாம்பழம், கோடம்பாக்கம், கொரட்டூர் உள்ள பல்வேறு இடங்களில் தண்ணீர் அதிக அளவில் தேங்கியுள்ளது.

 

மாநகராட்சி அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை காரணமாக சாலைகளில் தேங்கியிருந்த மழை நீர் வடிந்தது. ஆனாலும் இன்னும் பல இடங்களில் தண்ணீர் வடியாமல் உள்ளது.

 

குறிப்பாக ரங்கராஜபுரம் பகுதியில் சூழ்ந்துள்ள மழை நீரால் அந்த பகுதி மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் ரங்கராஜபுரம் பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 

 

Right Menu Icon