மன்சூர் அலிகானை மன்னிப்பதா? தண்டிப்பதா? த்ரிஷா கொடுத்த பதில்..!
மன்சூர் அலிகான் மீதான வழக்கு விவகாரத்தில் ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் விளக்கம் கேட்ட நிலையில் நடிகை திரிஷா பதில் அளித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் பேசிய மஞ்சுர் அலிகான் திரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சை கிளப்பியது.
இதற்கு த்ரிஷா கண்டனம் தெரிவிக்க திரையுலகத்தினர் பலரும் கண்டன குரல் எழுப்பினர். மன்சூர் அலிக்கான் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்ட நிலையில் அவர் மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தொடக்கத்தில் மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என்று சொன்ன மன்சூர் அலிகான் விசாரணைக்கு ஆஜர் ஆன பின் தனது பேச்சுக்கு மன்னிப்பும் கேட்டிருந்தார். இது தொடர்பாக ட்வீட் செய்த த்ரிஷாவும் தவறு செய்வது மனித குணம், மன்னிப்பது தெய்வ குணம் என்று பதிவிட்டு இருந்தார்.
இருப்பினும் வழக்கு நிகழ்வுகள் இருந்ததால் நடவடிக்கை எடுப்பது குறித்து நடிகை திரிஷாவிடம் போலீசார் கேட்டிருந்தனர். இதற்கு பதில் அளித்துள்ள த்ரிஷா மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு விட்டதால் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கூறியுள்ளார்.
இந்த விவகாரத்திற்கு இதோடு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில் சட்ட ஆலோசனைக்கு பிறகு போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிகிறது.





