டாஸ்மாக் கடைக்குள் புகுந்து ஊழியரை அரிவாளால் வெட்டி விட்டு பணத்தை எடுத்து சென்ற சம்பவம்..!
மதுரை சோழவந்தான் அருகே 4 பேர் கொண்ட கும்பல் மது கடை ஊழியரை அரிவாளால் வெட்டி விட்டு ஒரு லட்ச ரூபாய் மற்றும் அருகே இரும்பாடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றி வரும் கணேஷ்குமார் சனிக்கிழமை இரவு கடையை மூடிவிட்டு கிளம்பியுள்ளார்.
இதனை நோட்டமிட்டு நான்கு பேர் கொண்ட கும்பல் கடை அருகே அவரை அரிவாள் முனையில் கணேஷ்குமாரை மிரட்டி கடையில இருந்த ஒரு லட்சம் ரூபாய் மற்றும் மது பாட்டில்களை கொள்ளையடித்தது.
தகவலறிந்து அந்த கணேஷ்குமாரை மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் மதுக்கடை சிசிடிவியில் பதிவான காட்சிகள் மற்றும் கொள்ளையடித்து விட்டு தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





