--- --:--:-- --

கீழே விழுந்து 6 பற்களை உடைத்து கொண்ட சிறுவன்..!

9

புதுச்சேரியில் தவறி கீழே விழுந்த சிறுவனுக்கு உடைந்த ஆறு பற்களை பொருத்திய அரசு மருத்துவமனைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. புதுச்சேரியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது தவறி விழுந்ததில் அவரின் முன்பகுதியில் உள்ள ஆறு பற்கள் உடைந்தன.

 

உடனே விழுந்த பற்களோடு பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பொழுது பற்களை சேர்க்க முடியாது என்று கூறியதாக தெரிகிறது. இதனையடுத்த பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

பல் மருத்துவ பிரிவு தலைவர் சதீஷ் மருத்துவமனையில் இருந்த பொழுது அவர் விழுந்த ஆறு பற்களை 5 மணி நேரம் போராடி பொருத்தினார். அரசு மருத்துவமனையில் குறைந்த வசதியுடன் பற்களை பொருத்திய மருத்துவர் சதீஷை அதிகாரிகள் பாராட்டினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon