வாட்ஸ் அப்பில் மாணவியின் ஆபாச புகைப்படத்தை கேட்ட வாத்தி..!
கோவையில் பள்ளி மாணவிகளிடம் வாட்ஸ் அப்பில் ஆபாச புகைப்படம் அனுப்பும்படி பேசிய விளையாட்டு ஆசிரியரை மகளிர் போலீசார் போக்சாவின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
அவினாசி சாலையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பேட்மிட்டன் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்த அருண் என்பவரிடம் அதே பள்ளியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பயிற்சியாளாரும் மாணவியிடம் நட்பாக செல்போனில் whatsapp வாயிலாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது மாணவியின் ஆபாச புகைப்படங்களை அருண் கேட்டதாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





