தமிழகத்தின் நியாய விலை கடைகளுக்கு நாளை விடுமுறை..!
நியாய விலை கடைகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த மூன்றாம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தொடர்ச்சியாக விடுமுறை இன்றி நியாய விலை கடைகள் இயங்கின.
வரும் நாட்களில் விடுமுறை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே இதற்கு முன்பு கடந்த 13ஆம் தேதி என்று நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
நவம்பர் 25ஆம் தேதி நியாய விலை கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகள் நாளை இயங்காது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





