--- --:--:-- --

லீவு விடலான உங்கள வேற ஊருக்கு மாத்திடுவோம் : குழந்தையின் பேச்சு

4

டிவி பார்த்து பார்த்து கண்ணெல்லாம் பூத்து போச்சு என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்த சிறுவர்களின் வீடியோ வைரலாகியுள்ளது. நாகை மாவட்டத்தில் நேற்று விட்டுவிட்டு கனமழை பெய்து வந்த போதிலும் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட்டன.

 

இந்த நிலையில் பழைய விடுமுறையை எதிர்பார்த்து காத்திருந்த வடக்கு பால் பண்ணையை சேர்ந்த சிறுவர்கள் லீவு விடுங்க சார் என்று மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்தனர்.

 

இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்பு பயின்று வரும் சகோதரர்களை லீவு விடுங்க சார் இல்லனா உங்கள வேற இடத்துக்கு மாற்றிடுவோம் என்று மழலை மொழியில் சிரித்தபடி கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon