--- --:--:-- --

திருவண்ணாமலை தீபம் : சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

5

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார் அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ளார்.

 

வரும் 26 ஆம் தேதி திருவண்ணாமலை தீபத்தை காண பௌர்ணமியை ஒட்டி பல லட்சம் மக்கள் கிரிவலம் செல்ல வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 

இதன் காரணமாக வரும் 25, 26, 27 ஆகிய தேதிகளில் சென்னை திருவண்ணாமலை இடையில் இருக்கை மற்றும் படுக்கை வசதிகள் கொண்ட 50 பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

 

மேலும் நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, கோவையிலிருந்து திருவண்ணாமலைக்கு வரும் 24ம் தேதி வந்தால் 26 ஆம் தேதி வரை சிறப்பு அளிக்கப்படும் என குறிப்பிட்டார். திருவண்ணாமலைக்கான சிறப்பு பேருந்துகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

 

Right Menu Icon