--- --:--:-- --

மகளிர் சுய உதவி குழுவிடம் பண மோசடி.. 3 பேருக்கு சிறை..!

3

களிர் உ சுய உதவி குழு உறுப்பினர்களிடம் பணம் மோசடியில் ஈடுபட்ட ஏசுதாஸ் உட்பட மூன்று பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

சென்னை குளத்தூரில் செய்யப்பட்ட ஆம்ப்ரோ ஐபிஎல் என்று அறக்கட்டளைகள் இணைந்து 43 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களிடம் குறைந்த வட்டிக்கு கடன் வழங்குவதாக கூறி 36 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளது.

 

2011 முதல் 2014க்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற இந்த மோசடி தொடர்பான புகாரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி அறக்கட்டளையின் தலைவர் ஏசுதாஸ் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

 

இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி கோதண்டராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஏசுதாஸ் படம் 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் தலா 14 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

 

மேலும் இரு நிறுவனங்களுக்கும் தலா ரூ.20,000 அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

 

Right Menu Icon