--- --:--:-- --

மேல் முறையீடு செய்தவர்களுக்கு மகளிர் உரிமை தொகை எப்போது?

2

2ம் கட்ட மகளிர் உரிமை தொகை திட்டத்தை வரும் 10ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ஒரு கோடியே 6 லட்சத்து ஐம்பதாயிரம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

 

இந்த திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது. அதன்படி மேல்முறையீடு மற்றும் புதிதாக விண்ணப்பித்துள்ள 11 லட்சத்து 85 ஆயிரம் பேரின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன .

 

தீபாவளி பண்டிகை 12-ஆம் தேதி வருவதால் முன்கூட்டியே உரிமைத் தொகையை விடுவிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் வரும் பத்தாம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் இரண்டாம் கட்ட உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த முதலமைச்சர் ஸ்டாலின் உடல்நிலை சரியானதும் பங்கேற்கும் முதல் அரசு விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon