மயக்க ஊசி செலுத்திய ஒரு சில நிமிடங்களில் உயிரிழந்த இளைஞர்..!
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் அளவுக்கு அதிகமான மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அங்கம்மாள் காலனியில் வசித்து வந்தவர் நவீன். இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு மதுபோதையில் வாகனம் இயக்கி விபத்தில் சிக்கிய நிலையில் வலது பக்க தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இங்கே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவீனுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக அவருடைய உடலில் மருத்துவர்கள் மயக்க ஊசியை செலுத்தியதாக கூறப்படும் நிலையில் மயக்க ஊசி செலுத்திய சிறிது நேரத்திலேயே நவீன்குமார் மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உடனே மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள் இளைஞர்களின் உடலில் அளவுக்கு அதிகமான மயக்க மருந்து செலுத்தப்பட்டதால் அவர் உயிரிழந்தார் எனக்கூறி போலீசில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இளைஞர் உடலை சேலம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்ற நிலையில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





