7 மாத கருவை கலைக்க முயற்சித்த பெண்.. மருத்துவர் ஆலோசனை இன்றி செயல்பட்டதால் பலியான சோகம்..!
7 மாத கருவை கலைக்க மாத்திரை தின்ற கர்ப்பிணி பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புது குடி கிராமம் கரைமேடு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி ரமணா.
இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ரமணா 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவது குழந்தை தேவை இல்லை என நினைத்த ரமணா கர்ப்பத்தை கலைக்க முடிவு செய்துள்ளார்.
தொடர்ந்து அங்குள்ள ஒரு மருந்து கடையில் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு உள்ளார். அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரது உறவினர்கள் ரமணாவை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அந்த டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். வயிற்றில் இருந்த பெண் சிசுவை டாக்டர்கள் அகற்றினார். இதற்கிடையே ரமணாவுக்கு தொடர்ந்து ரத்தப்போக்கு ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு வந்த டாக்டர் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





