--- --:--:-- --

தனியார் பேருந்துக்கு அபராதத்தை விதித்த அதிகாரிகள்..!

9

செங்குன்றத்தில் கனரக வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பறிமுதல் செய்து போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனார்.

 

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் வட்டார போக்குவரத்து போலீசார் நல்லூர் சுங்கச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு தனியார் பேருந்துகள் லாரிகள் மற்றும் பயன்படுத்தப்படும் ஹாரன்களைப் பறிமுதல் செய்தனர்.

 

அப்பொழுது தடை செய்யப்பட்ட அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பொருத்தப்பட்ட வாகனங்களில் இருந்து யார் ஹாரன்களை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

15 வாகனங்களில் விதிகளை மீறிப் பொருத்தப்பட்ட அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் மற்றும் அதிக ஒளி வீசும் ஏழு முகப்பு விளக்குகளை பறிமுதல் செய்து 1.6 லட்சம் ரூபாய் அபராதத்தை விதித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon