தன்னை கடித்த கட்டுவிரியன் பாம்புடன் சிகிச்சைக்கு வந்த பெண்..!
தூத்துக்குடியில் தன்னை கடித்த கட்டுவிரியன் பாம்பு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த பின்னால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் மோகனூர் அருகே அத்திக்காடு கிராமத்தை சேர்ந்தவர் அழகு ராணி.
தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது அவரை கட்டு விரியன் பாம்பு கடித்தது. இதனையடுத்து அழகு ராணி தன்னை கடித்த கட்டுவிரியின் பாம்புடன் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்துள்ளார்.
இதனால் அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அழகு ராணி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





