கோவை கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்து..!
கருமத்தம்பட்டியில் உள்ள ஜான்சன் பொறியியல் கல்லூரி ஆடிட்டோரியத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் சூலூர் அருகே ஜான்சன் பொறியியல் கல்லூரி ஆடிட்டோரியத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீப்பிடித்த பகுதியில் மாணவர்கள் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. தீ மளமளவென பரவியதால் போன் இருக்கைகள் எரிந்து நாசமாகியுள்ளது.





