--- --:--:-- --

நடு வானில் விமானத்தை ஆப் செய்ய முயன்ற பயணி..!

6

அமெரிக்காவில் நடுவானில் விமானத்தின் என்ஜினை அணைக்க முயன்ற பயணி கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள எவரெஸ்ட் விமான நிலையத்திலிருந்து சேண்ட் பிரான்சிஸ்கோப் விமானம் ஒன்று புறப்பட்டது.

 

நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானத்தில் 84 பேர் பயணம் செய்தனர். அப்பொழுது பயணி ஒருவர் திடீர் என்று அங்கிருந்த கைப்பிடியை இழுத்து விமானத்தின் இன்ஜினை அணைக்க முயன்றதாக கூறப்படுகிறது.

 

சுதாரித்துக்கொண்ட விமானி உடனடியாக விமான நிலையத்தில் விமானத்தை தரை இறக்கினார். இந்த சம்பவத்தால் பயணிகளிடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமான நிலையத்தில் தயாராக இருந்த போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon