திருமண சான்றிதழ் வழங்க இழுத்தடிப்பு.. சார்பதிவாளர் அலுவலகத்தில் இளம் ஜோடி தர்ணா..!
காதல் திருமணம் செய்த இளம் ஜோடிக்கு திருமண சான்றிதழ் வழங்காமல் சார் பதிவாளர் காலம் தாழ்த்தி வந்ததால் இளம் தம்பதியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜோஷி என்ற பெண்ணுக்கும் கலைவான் என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் பெண் வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 13ஆம் தேதி அன்று கிறிஸ்தவ தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது.
இவரின் திருமண சான்றிதழ் வேண்டி சார்பதிவாளரிடம் விண்ணப்பித்திருந்தனர். ஒரு மாதத்திற்கு மேலாக திருமண சான்றிதழ் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்த நிலையில் புதுமண தம்பதியினர் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமண சான்றிதழ் வழங்க கோரி தர்ணாவில் ஈடுபட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





