--- --:--:-- --

சென்னையில் நாளையும் மின்சார ரயில்கள் ரத்து..!

1

சென்னை மாம்பலத்தில் இருந்து பல்லாவரம் வரை ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரயில்கள் அனைத்தும் இன்று காலை 10.35 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நிறுத்தப்பட்டன.

 

இதனால் தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அனைவரும் மாநகர பேருந்துகளில் பயணம் செய்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தாம்பரம் பகுதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு தங்களது அலுவல்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

 

இந்நிலையில் நாளையும் ரயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக 41 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே 4 மணி நேரம் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தொழில்நுட்ப பணிகள் நடைபெறுவதால் கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் மதியம் 3.15 மணி வரை ரயில்கள் இயக்கப்படமாட்டாது என கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon