வீட்டில் ஊஞ்சல் விளையாடி கொண்டிருந்த பொழுது சுருக்கு மாட்டி மாணவன் உயிரிழப்பு..!
சென்னையில் ஏழாம் வகுப்பு மாணவன் வீட்டில் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது கழுத்தில் சுருக்கு மாட்டியதில் மூச்சு திணறி உயிரிழந்தான்.
செல்வா என்ற 12 வயது மாணவன் பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும் ஊஞ்சல் விளையாட்டில் ஈடுபட்ட பொழுது கழுத்தில் சுருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சுகாதார நிலையத்திற்கு தூக்கிச் சென்று காண்பித்த பொழுது சிறுவன் இறந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் கூறியதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





