--- --:--:-- --

பிரபல மருத்துவமனை பெயரில் போலி வெப்சைட்..!

8

பிரபல தனியார் மருத்துவமனை பெயரில் போலியாக இணையதளத்தை உருவாக்கி உடல் உறுப்புகளை பெற்று தருவதாக மோசடி செய்த நைஜீரியா ஊகாண்டா நாட்டினர் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

 

சென்னையில் இயங்கும் பிரபல தனியார் மருத்துவமனை இணையதளத்தை போன்று போலியான இணையதளத்தை சைபர் கிரைம் கும்பல் ஒன்று உருவாக்கியுள்ளது.

 

அந்த போல இணையதளத்தில் நுரையீரல், சிறுநீரகம் என மாற்று உறுப்புகள் தானத்திற்கு 5 கோடி ரூபாய் பணம் தருவதாக விளம்பரத்தை பதிவு செய்திருந்தது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம் போலியாக விளம்பரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தது.

 

அதன் பெயரில் தீவிர விசாரணை நடத்திய போலீசார் சைபர் கிரைம் கும்பல் பெங்களூருவில் இருப்பதை கண்டறிந்தனர். அதனை தொடர்ந்து பெங்களூரு விரைந்த போலீசார் அப்பொழுது மோசடியில் ஈடுபட்டு வந்த நபர்கள் நைஜீரியாவின் உகாண்டாவை சேர்ந்த ஒலிவியா ஆகிய இரு வெளிநாட்டினரையும் கைது செய்தனர்.

 

மேலும் இவர்களுக்கு உதவி புரிந்ததாக மோனிகா உள்ளிட்டவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon