ஆபாச படம் தனிமையில் பார்ப்பது தவறில்லை – உயர்நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு
தனிமையில் இருக்கும் பொழுது ஆபாச படம் பார்ப்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம் என்றும், தனிமையில் ஆபாச படம் பார்ப்பது எந்த தவறும் இல்லை என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சாலை ஓரம் செல்போனில் ஆபாச படம் பார்த்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவின் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கேரளா உயர் நீதிமன்ற நீதிபதி தனிமையில் இருக்கும் பொழுது மற்றவர்களுக்கு காண்பிக்காமல் ஆபாச படம் பார்ப்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம் என்பதால் அதில் எந்த தவறும் இல்லை என தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





