--- --:--:-- --

அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை.. இயற்கை உபாதை கழிக்க முடியாமல் பெண் தவிப்பு..

7

கடலூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறி பாதிக்கப்பட்ட பெண் தனது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கிராமத்தை சேர்ந்த பத்மாவதி என்பவர் கடலூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு குழந்தையை பெற்றெடுத்தார். அப்பொழுது மருத்துவர்கள் கருப்பை பகுதிகளையும் சேர்த்து தையல் போட்டதால் பத்மாவதிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்தவர்கள் இது குறித்து பத்மாவதி மற்றும் அவரது கணவருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் அவருக்கு சரியாக சிறியவர்களுக்கு முடியாமல் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளார்.

 

இது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மாநிலத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பத்மாவதி அவரது கணவர் மற்றும் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon